தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

J&K's Poonch
J&K's Poonch

By

Published : Sep 11, 2020, 5:33 PM IST

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய ராணுவப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கார்னல் தேவேந்தர் பேசுகையில், ”எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிகள், ஷெல் மோட்டர் குண்டுகள் ஆகியவை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை இரண்டாயிரத்து 730 முறை எல்லையில் அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் காரணமாக எல்லைப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:புத்தரின் பிச்சைப்பாத்திரம் தொடர்பில் நிதிஷிக்கு கடிதம் எழுதிய ஆர்.ஜே.டி முன்னாள் தலைவர் !

ABOUT THE AUTHOR

...view details