தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு: இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

Line of control International border Mortar shells Mendhar sector இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு
Line of control International border Mortar shells Mendhar sector இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு

By

Published : Apr 14, 2020, 10:05 AM IST

இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதி ஜம்மு காஷ்மீர் யூனியன் கதுவா மாவட்டம் பூஞ்ச் பகுதி வழியாக செல்கிறது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் சிறிய ரக துப்பாக்கியால் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.

இந்தத் தாக்குதலையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள், “பூஞ்ச் பகுதியிலுள்ள மெந்தார் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்தினர்” என தெரிவிக்கின்றன.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியான தாக்குதல் நடத்திவருகின்றது.

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுக் கூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details