கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பாதுகாப்புப் படை எல்லைமீறி நடத்திய தாக்குதலை, இந்தியப் பாதுகாப்புப் படை திரும்ப தாக்குதல் நடத்தி துப்பாக்கிச்சூட்டை முடிவுக்கு கொண்டுவந்தது. வெளிநாட்டினர் பலரும் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு வருகை தரவுள்ளதால் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த வேண்டாம் என இந்தியா சார்பாக பாகிஸ்தானிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இந்தியா வேண்டுகோள் விடுத்தும் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்! - pakistan army opened fore
டெல்லி: கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையிடம் எல்லையில் அத்துமீற வேண்டாம் என இந்தியா வேண்டுகோள் விடுத்தும் பாகிஸ்தான் துப்பாகிச்சூடு நடத்தியதால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
ஆனால் இதனை கிஞ்சித்தும் மதிக்காமல் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை, பாலகோட் பகுதியின் மெந்தாரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய பாதுகாப்புப் படை சார்பாக தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: பாகிஸ்தான் படைகள் தொடர் தாக்குதல்: எல்லையோர மக்கள் அச்சம்