தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"சாரே சஹான் சே அச்சா" பாடலைப் பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி - சாரே சஹான் சே அச்சா பாடலை பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி

பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் இந்திய தேச பக்திப் பாடலான "சாரே சஹான்  சே அச்சா" பாடலை பாடியுள்ளார்.

அல்தாப் ஹூசைன்

By

Published : Sep 2, 2019, 12:59 PM IST

பாகிஸ்தானில், முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார் அல்தாப் ஹூசைன். இவர் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அப்போது பேசிய அவர் காஷமீர் அந்நாட்டு மக்களின் பெரும் ஆதரவோடு, அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீருக்காக, பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்து தோல்வியடைந்தது. இருந்தாலும் இந்தியாவிற்கு ஏதிரான சதியை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளவில்லை என்று கூறினார்.

பின்னர், இந்தியாவின் தேச பக்திப் பாடலான "சாரே சஹான் சே அச்சா" பாடலை பாடினார். காஷ்மீர் விவகராத்தில் பலரும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர் ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"சாரே சஹான் சே அச்சா" பாடலை பாடிய பாகிஸ்தான் அரசியல்வாதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details