இந்தியா சீனா இடையே தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி, காஸ்பா ஆகிய பகுதிகளில் நேற்று (அக்.9) மாலை ஐந்தரை மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்திய ராணுவம் சார்பில் அவர்களுக்குத் தக்க பதிலடி அளிக்கப்பட்டது.