ஜம்மு-காஷ்மீர் மாவட்டம் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் (டிச27) பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின.
இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் மசூதி ஒன்றும் சேதமடைந்தது. இந்தாண்டு மட்டும் 3,200 முறை சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இது கடந்தாண்டு (2018) 1600ஆக இருந்தது. மேலும், கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை 176 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தற்போது அந்த எண்ணிக்கை 329ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் அதிகமாக ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் விவகாரம்: இந்தியாவுக்கு சீனா திடீர் அறிவுரை