தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி

இஸ்லாமாபாத்: சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீரை தார்மீக ரீதியாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டும் தங்களுக்கு சொந்தமானதாக இந்தியா நினைக்கிறது என பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

pak-army-chief-bajwa-rakes-up-kashmir-again
pak-army-chief-bajwa-rakes-up-kashmir-again

By

Published : May 25, 2020, 4:16 PM IST

பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பயங்கரவாதிகளை இந்தியா ராணுவம் சுட்டுக் கொன்றது. இதனைத் தொடர்ந்து, ரமலான் தினமான இன்று பாகிஸ்தான் பூனாவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அந்நாட்டு ராணுவ தளபதி ஜாவேத் பாஜ்வா சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அவர், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீரை தார்மீக ரீதியாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டும் தங்களுக்கு சொந்தமானதாக இந்தியா நினைக்கிறது என தெரிவித்தார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, சட்டவிரோதமான ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் ராணுவம் தோலோடு தோல் நின்று ரமலான் பண்டிகையை கொண்டாடிவருகிறது என பாஜ்வா தெரிவித்தார்.

காஷ்மீரில் நடைபெறும் மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகளை சர்வதேச அமைப்புகளிடமிருந்து திசைதிருப்புவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு உள்ள அப்பாவி மக்களை இந்திய ராணுவம் தாக்குகிறது என பாஜ்வா குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’

ABOUT THE AUTHOR

...view details