புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் குமார்-அன்பு சகோதரர்கள். முன்பு திரையரங்குகளில் வைக்கப்படும் பேனர்களிலும், விளம்பரங்களிலும் இவர்களது ஒவியம் கண்டிப்பாக இடம்பெறும். அந்தக் காலத்தில் ஓவியங்கள் வரைவதில் பிரபலமானவர்களாக கருதப்பட்ட இவர்களின் அழகான வாழக்கை, டிஜிட்டல் வளர்ச்சி வந்ததிலிருந்து நலிவடைய ஆரம்பித்துள்ளது.
இருப்பினும் துயரத்திலிருந்து மீண்ட சகோதரர்கள், 2013ஆம் ஆண்டு முதல் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளில் தங்களது ஒவியங்களை பதிக்கத் தொடங்கினர். மேலும், இவர்கள் கண்தானத்தை வலியுறுத்தியும், உலக தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து கடற்கரை சாலையில் வைத்து அனைவரையும் அசத்தினர்
ஓவியத்திலும் வித்தியாசம் காட்டலாம் என்று நினைத்த சகோதரர்கள், ஓவியங்களை வரைவதற்கு பழைய சைக்கிள் டயர், பழைய தட்டுகள், உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலி ,பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட மக்காத பொருட்களை பயன்படுத்தி அப்துல் கலாம், அன்னை தெரேசா உள்ளிட்ட பல உலக தலைவர்களின் படங்களை வரைந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தென்னங்கீற்று, பனை, மட்டை உள்ளிட்ட மக்கும் பொருட்கள் மீதும் ஓவியங்கள் வரைகின்றனர்
மக்காத பிளாஸ்டிக் பொருட்களைக்கொண்டு ஓவியங்கள் இதுகுறித்து சகோதரர்களின் உறவினர் விஷ்வா கூறுகையில், "புதுச்சேரி மக்கள் தங்களுக்கு வேண்டாம் என்று பயன்படாத பொருட்களை குப்பையில் கொட்டுவதை தவிர்த்து, எங்களிடம் சொன்னால் போதும் நாங்களே பிளாஸ்டிக் பொருட்களை வந்து எடுத்துக்கொள்வோம். இதனால், தேவை இல்லாத பொருளை பயனுள்ள பொருளாக மாற்றமுடியும்" என்றார்.
இதையும் படிங்க:வீட்டில் கத்தியுடன் நுழைந்து மிரட்டியர்: சிசிடிவியில் சிக்கி கைது!