ஒரு பெண் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கிக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாகவும் இருக்கவேண்டும். ஒடிசாவின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பினபானி மொகந்தியின் கதையும் இப்படித்தான் அமைந்திருக்கிறது. அவர், பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
பினபானி மொகந்தியைப் பொறுத்தவரை, தன் தாயாரால்தான்தான் சமூகத்தில் இப்படியான ஓர் இடத்துக்கு வரமுடிந்தது என்று கருதுகிறார். அவருக்கு உத்வேகமளித்தவராக மட்டுமன்றி, சமுதாயத்தில் பினபானிக்கன ஓர் இடத்தை அமைத்துக்கொடுப்பதில் அந்தத் தாயார் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
இந்த உழைக்கும் மகளிர் நாளில், அனைத்து பெண்களும் ஒன்றுபட்டு, சமூகத்தைச் சீர்திருத்த உறுதியேற்க வேண்டும்; அதன் மூலம் ஒரு புதிய விடியலை எழ செய்ய வேண்டும் என்று கூறுகிறார், பினபானி.
"85 வயதிலும் நான் இன்னும் சமூகத்துக்காக எழுதுவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறேன். என் கடைசி மூச்சுவரை இது தொடரும். என் உடல்நிலையானது இப்போது மிகவும் மோசமாக உள்ளது. கடவுள் எனக்கு தொடர்ந்து கருணை காட்டினால், வரும் நாள்களிலும் என் எழுத்துகள் இந்த சமூகத்தின் நலனுக்காக தடைபடாமல் தொடரும்" என்கிறார் மொகந்தி.
இந்த ஆணாதிக்க சமூகத்தில் இன்றைய பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் சமமாக நடத்தப்படாமை என்பதில் தொடங்கி பாலினத் துன்புறுத்தல் செய்யப்படுவதுவரை, அவளுடைய சிக்கல் உரிய கவனத்தைப் பெறமுடிவதில்லை. சில நேரங்களில் பெண்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கொடுமையும், கொலைகளும் அதிகரித்துவரும் நிலையில், அண்மையில் நடந்த மோசமான எடுத்துக்காட்டாக கூறவேண்டும் என்றால், ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது. டெல்லியில் நிர்பயா பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் சொல்லலாம். அந்த வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படவில்லை என்பது பெண்களுக்கு இந்த நாட்டின் நீதித்துறை மீது கவலைகொள்ள வைக்கிறது.
தற்போதைய சூழலில் சில இடங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; அதேவேளை பல இடங்களில் இடர்பாடுகளுக்கும் சித்ரவதைகளுக்குமே பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. அந்த வலிகளிலிருந்து பெண்களை விடுவிக்க, பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது இன்றியமையாதது.
ஒரு பெண் தன்னை அதிகாரம் கொண்டவள் என்று கருதவேண்டும்; அவள் தன் எதிரிகளை, பாலின சமத்துவமின்மையை வெற்றிகொண்டு மேலே வரவேண்டும்.
இதையும் படிங்க... 25 ஆண்டுகளுக்குப் பின் பெண்களுக்காக திறக்கும் தங்க மசூதியின் கதவுகள்!