இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களில் இரண்டு உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல்: பத்ம விருது விழா ஒத்திவைப்பு - Padma Awards function Postponed
17:07 March 14
கொரோனை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் தங்களின் வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும், ஒரே இடத்தில் அதிகம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பத்ம விருதுகள் வழங்கும் விழாவை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. சபரிமலை, திருப்பதி கோயில்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹரியானாவில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனாவா?