தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

P Chidambaram

By

Published : Oct 14, 2019, 10:16 AM IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப. சிதம்பரத்தை சிபிஐ காவல்துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை வருகின்ற 17ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இதையடுத்து ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்பிணையை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை சிபிஐயிடம் சிதம்பரத்தை விசாரிப்பதற்கு கோரிக்கை வைத்திருந்தது. அதனடிப்படையில் ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இதையும் படிங்க: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தர
வு

ABOUT THE AUTHOR

...view details