கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் பொருளாதாரம் பாதிக்காத வண்ணம் செயல்பட ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகைக்கான ரெப்போ வட்டி 5.15 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை வரவேற்பதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் பணப்புழக்கத்தைச் சீராக்கும்விதமாக மூன்று லட்சம் கோடி சந்தையில் ரிசர்வ் வங்கி செலுத்தும் முடிவும் சரியான முடிவு எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாதக்கடன் தவணைத் தொகையான இஎம்ஐ தொகை தொடர்பான அறிவிப்பு அரை மனதுடன் எடுக்கப்பட்ட விவாதத்திற்குரிய முடிவு என சிதம்பரம் கூறியுள்ளார்.