நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான விவாதக் கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது, “இந்தியப் பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) இல்லை. மாறாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே திறமையற்ற மருத்துவர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகிய திறமைவாய்ந்த மருத்துவர்கள் (நிபுணர்கள்) நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
அரவிந்த் பனாரியா கூட வெகுதொலைவில் உள்ளார். நாட்டு மக்களின் கைகளில் பணப்புழக்கம் இல்லை. ஆகவே முதலீடு செய்யும் அளவிற்கு அவர்களிடம் பணம் இல்லை. இதுமட்டுமின்றி நாட்டில் தற்போது நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.
இது தொடர்ந்தால், ஒருவரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள்” என்றார்.
'இது தொடர்ந்தால், முதலீடு வராது' எச்சரிக்கும் ப.சிதம்பரம் - 'இது தொடர்ந்தால், முதலீடு வராது' எச்சரிக்கும் ப.சிதம்பரம்
டெல்லி: நாட்டில் நிலவும் நிச்சயமற்ற நிலை தொடர்ந்தால் ஒருவரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என மாநிலங்களவையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
P Chidambaram in Rajya Sabha about budget
TAGGED:
P Chidambaram in Rajya Sabha