தமிழ்நாடு

tamil nadu

ப.சிதம்பரம் அமலாக்கத்துறையால் கைது!

By

Published : Oct 16, 2019, 11:27 AM IST

Updated : Oct 16, 2019, 2:44 PM IST

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரத்தை  அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

P.Chidambaram Arrest today

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளார். இதே வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ப.சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் கைது செய்யலாம் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் அமலாக்கத்துறையினர் திகார் சிறைக்குச் சென்றனர். இதனைதொடர்ந்து ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை செய்த அமலாக்கத்துறை தற்போது அவரை கைது செய்தது.

Last Updated : Oct 16, 2019, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details