பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறகிறது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தள - பாஜக கூட்டணி ஒருபுறமும், ராஷ்டிரிய ஜனதா தள -காங்கிரஸ் கூட்டணி மறுபுறமும் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் அம்மாநிலத்தின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளாரக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான மனிஷ் பாரியார் களமிறங்குகிறார்.
மனிஷ் கடந்துவந்த பாதை...
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தலைமை பண்பு குறித்த பாடத்தில் பட்டம் பெற்ற இவர், வர்த்தக அமைச்சகத்தில் உயர் அலுவலர் பொறுப்பில் இருந்துள்ளார். தனது பணியில் திருப்தி கிடைக்காத காரணத்தால், சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் மக்கள் சேவையில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் அரசியலில் நேரடியாகக் களமிறங்கியுள்ளார், மனிஷ்.