தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதி வழங்காமல், விதிமுறைகளை மட்டும் அளிப்பதா? மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி - நிதி வழங்காமல், வழிமுறைகளை அளிப்பதா

ஹைதராபாத்: கரோனா நெருக்கடி, முழு அடைப்பு நெருக்கடியில் மக்கள் சிக்கியுள்ள நிலையில் நிதி நிவாரணம் அளிக்காமல், கட்டுப்பாடு விதிமுறைகளை மட்டும் தொடர்ந்து வழங்கிவருவது ஏன் என மத்திய அரசிடம் அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.

Asaduddin Owaisi  AIMIM  Union Home Minister  MHA  All India Majlis-e-Ittehadul Muslimeen  coronavirus  COVID-19  நிதி வழங்காமல், வழிமுறைகளை அளிப்பதா  அசாதுதீன் ஓவைசி, லாக்டவுன், கரோனா வைரஸ், நிதி நெருக்கடி
Asaduddin Owaisi AIMIM Union Home Minister MHA All India Majlis-e-Ittehadul Muslimeen coronavirus COVID-19 நிதி வழங்காமல், வழிமுறைகளை அளிப்பதா அசாதுதீன் ஓவைசி, லாக்டவுன், கரோனா வைரஸ், நிதி நெருக்கடி

By

Published : May 3, 2020, 2:35 PM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் முடக்கம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ள ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, “மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்காமல், தொடர்ந்து கட்டுப்பாடு விதிமுறைகளை மட்டும் அறிவித்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ட்வீட்டில், “1952ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம், பொதுத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றை கையாள்வதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது என்று தெளிவுப்படுத்துகிறது.

ஆனால் 2020ஆம் ஆண்டில், அமித் ஷா மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறார். இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? எந்த உதவியும் அளிக்காமல் மாநிலங்களை கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள செய்வதேன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிவப்பு மண்டலப் பகுதிகளில் பல்வேறு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏழைகளுக்கு ஏழாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details