தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சைபராபாத் போலீசாருக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி: காரணம் இதுதானா? - சைபராபாத் காவல் துறையினர் டுவீட்

ஹைதராபாத்: ஐடி நிறுவனங்களில் 'ஜிஹாதிகள்' வேலைப்பார்க்கிறார்கள் என்று கூறிய காவல் துறையினரின் ட்விட்டருக்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்து கருத்து பதிவிட்டுள்ளார்.

சைபராபாத் போலீசாருக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி: காரணம் இதுதானா?
சைபராபாத் போலீசாருக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி: காரணம் இதுதானா?

By

Published : Jan 9, 2020, 7:42 AM IST

“ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க ஐடி நிறுவனங்களில் ‘ஜிஹாதிகள்’ வேலைப்பார்ப்பார்கள். அதனால் ஈரான் தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கலாம். அதனால் அப்படி சந்தேகம் இருப்பவர்கள் குறித்து விசாரியுங்கள்” என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சுரேஷ் கோட்ஷட்டில் ட்வீட் செய்திருந்தார்.

பாஜக ஐடி பிரிவினர் டுவீட்

இதற்கு பதிலளித்த சைபராபாத் காவல் துறையினர், “ஆமாம், நாங்கள் இதுகுறித்து விசாரிக்க முன்கூட்டியே இன்ட்டெல் காவல் குழு அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி 24X7 தீவிர கண்காணிப்பு பணியில் இருக்கிறோம்” என பதிலளித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, “ஜிஹாதி என்ற பெயரில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கூறுங்கள் இல்லையென்றால், எதை சொன்னீர்கள் என்பதை தெளிவுப்படுத்துங்கள்.

அசாதுதீன் ஓவைசி டுவீட்

நீங்கள் மட்டும் என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொல்லலாம். பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை. (கோட்சேவை நினைவில் கொள்ளுங்கள்)” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சைபராபாத் காவல் துறையினர் டுவீட்

இதனையடுத்து இது குறித்து சைபராபாத் காவல் துறையினர், “எங்கள் ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது நாங்கள் எப்போதும் அலெர்ட்டாக இருக்கிறோம் என்பதற்காகத்தான் அவ்வாறு குறிப்பிட்டோம். எங்களுக்கு நகரத்தின் அமைதிதான் முக்கியம்” என கூறியுள்ளனர்.

இதையும் படிங்க...பயத்தில் உறைய வைக்க மீண்டும் வருகிறது 'ஈவில் டெட்'

ABOUT THE AUTHOR

...view details