தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீன விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்' - ஒவைசி - ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி

ஹைதராபாத் : உத்தரப்பிரதேச அரசின் 'தோக் டெங்கே' கொள்கையால் காவல் துறையினர் எட்டு பேர் கொல்லப்பட்டது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக சாடியுள்ளார்.

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்- ஒவைசி
சீன விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்- ஒவைசி

By

Published : Jul 6, 2020, 1:52 AM IST

கான்பூர் என்கவுன்ட்டர் குறித்து பேசிய ஒவைசி, "கான்பூரில் நடந்த சம்பவத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் முழுமையான பொறுப்பு. 'தோக் டெங்கே' கொள்கை என்ற பெயரில் பொதுமக்களை கொலை செய்கின்றனர்.

முதலமைச்சர் யோகி 'தோக் டெங்கே' கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. துப்பாக்கியை கொண்டு மாநிலத்தில் ஆட்சியை நடத்த முடியாது. அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படையில் தான் நாட்டை வழிநடத்த வேண்டும்

துணிச்சலான காவல் துறை அலுவலர்களைக் கொன்ற குற்றவாளிகளைத் தண்டிக்க ஒரு சிறப்புப் படை உருவாக்கப்பட வேண்டும். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் வெற்றியாக இருக்கும்" என்று கூறினார்.

''தமது எல்லைக்குள் யாரும் வரவில்லை, நம் எல்லைப் பகுதிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை" என்று அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது பிரதமர் மோடி கூறியதை விமர்சித்த ஒவைசி, இது பிரதமரின் மிகப்பெரிய பொய் என்று கூறியுள்ளார். பிரதமர் ஏன் 'சீனா' என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் 20 வீரர்கள் உயிர் இழந்த இடத்தில் ஹெலிபேட் கட்டுவது குறித்த தகவல்கள் குறித்தும் ஒவைசி பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

'திட்டமிடப்படாத ஊரடங்கால் நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். மக்களின் வருமானம் குறைந்துள்ளது. இதில், உங்களது சேவை எங்கே இருந்தது?' என்று பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details