கரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான மருத்துவ உபகரணங்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மார்ச் 11ஆம் தேதிக்கு பின் மத்திய அரசு சார்பாக 3.04 கோடி என்95 முகக்கவசங்கள், 1.28 பிபிஈ சாதனங்கள், 10.83 கோடி ஹெச்சிக்யூ (HCQ) மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 22 ஆயிரத்து 522 வெண்டிலேட்டர்கள் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டது.
கரோனா சிகிச்சை வசதிகளை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவரும் உபகரணங்களில், பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.