தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

134 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது! - 7 பேர் கைது

மேற்கு வங்கத்தின் அம்ஹெர்ஸ்ட் பகுதியில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 134 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

over-one-quintal-ganja-seized-in-kolkata-7-arrested
over-one-quintal-ganja-seized-in-kolkata-7-arrested

By

Published : Jul 28, 2020, 12:59 PM IST

மேற்கு வங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினருக்கு அம்ஹெர்ஸ்ட் பகுதியில் சரக்கு வாகனம் மூலம் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 134.77 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 134 கிலோ கஞ்சா மொத்தம் ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சரக்கு வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட கஞ்சா

இவர்கள் அனைவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 28ஆம் தேதி வரை காவல் துறையினர் காவலில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கஞ்சா கிடைக்கவில்லை என கத்தியை விழுங்கிய இளைஞர்... எக்ஸ்ரே பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details