டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கிலும் உள்ள உயிர்காக்கும் நோய்த்தடுப்பு சேவைக்ள் சீர்குலைத்துள்ளது. இதனால், ஒரு வயதிற்குட்பட்ட சுமார் 80 மில்லியன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து யுனிசெப், சபின் தடுப்பூசி நிறுவனம் சேகரித்த தரவுகளில் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே முடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் மில்லியன் கணக்கான குழந்தைகள் டிப்தீரியா, தட்டம்மை, போலியோ போன்ற நோய்களுக்கு உள்ளாகும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
"கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக, நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தட்டம்மை போன்ற நோய்களுக்கு பல தசாப்தங்களாக வழங்கப்பட்டு வந்த சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
பல நாடுகள் காலரா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல், போலியோ, டெட்டனஸ், டைபாய்டு போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தகுந்த இடைவெளி கடைபிடிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தட்டம்மை மற்றும் போலியோ தடுப்பூசி தொடர்பாக பரப்புரைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, 27 நாடுகளில் தட்டம்மை விழிப்புணர்வு பரப்புரையும், 38 நாடுகளில் போலியோ பரப்புரையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட 21 ஏழை நாடுகளில் வசிக்கும் சுமார் 24 மில்லியன் மக்கள் போலியோ, தட்டம்மை, டைபாய்டு, காலரா, ரோட்டா வைரஸ், எச்.பி.வி, மூளைக்காய்ச்சல் மற்றும் ரூபெல்லா ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக , நோய் தடுப்பு சேவைகள் முடங்கியுள்ளதால் அம்மை மற்றும் போலியோ போன்ற நோய்கள் மீண்டும் எழும் அபாயம் உள்ளது" என்று காவி தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் சேத் பெர்க்லி கூறியுள்ளார்.
ஊரடங்கு நடவடிக்கை, வணிக விமானங்களின் சேவை பாதிப்பு ஆகியவையால் யுனிசெஃப் திட்டமிட்ட தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தணிக்க, அரசாங்கங்கள், தனியார் துறை, விமான நிறுவனங்கள் மலிவு விலையில் இந்த உயிர்காக்கும் தடுப்பு மருந்துகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என யுனிசெஃப் கேட்டுக்கொண்டுள்ளது.
சில நோய்த்தடுப்பு முயற்சிகளை தற்காலிகமாக இடைநிறுத்தம் தேவையானால், நோய்த்தடுப்பு மருந்துகள் விரைவில் மறுதொடக்கம் செய்யப்பட வேண்டும், இல்லை என்றால் மற்றொரு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த கருவி மூலம் பறவைக் காய்ச்சலை 20 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியும்!