பிகாரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில், இன்று முதல்கட்டமாக 71 சட்டடப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிகார் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சஞ்சய் குமார் சிங் கூறுகையில், "முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 31 ஆயிரத்து 380 வாக்குசாவடிகளில் ஆறாயிரம் வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் ஆகும்.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் அமைதியான நடத்த ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஈவிஎம் இயந்திரங்கள், விவிபிஏடி-கள் ஏற்கனவே வந்துள்ளன.
பிகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில், ரோஹ்தாஸ், கைமூர், ஜஹானாபாத், போஜ்பூர், கயா, நவாடா, நாலந்தா, முங்கர் போன்ற பகுதிகளிலும், நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளும் அடங்கும். சுமூகமான, அமைதியான தேர்தலை நடத்துவதற்கான முயற்சியில், இப்பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 277 சட்டவிரோத ஆயுதங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஐபிசி பிரிவு 107 இன் கீழ் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாட்டின் கீழ், 25,390 நபர்கள் எந்தவொரு அழிவுகரமான செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று எழுத்துப்பூர்வ வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். பிகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்ததிலிருந்து, இதுவரை 10 லட்சத்து 78 ஆயிரத்து 728 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர 19.99 கோடி ரூபாய் ரொக்கம், 44 நான்கு சக்கர வாகனங்கள், 2084.91 கிலோ கஞ்சா,1.5 கிலோ ஹெராயின், 40 பாக்கெட்டுகள் ஸ்மாக், 40 லிட்டர் ஸ்பிரிட், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ”என்றார். தேர்தல் தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது.