2020ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒருபகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் டெல்லி அரசும் இணைந்து தலைநகர் முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து 474 மாணவிகள், 162 மாணவர்கள் என மொத்தம் 636 பள்ளி மாணவர்களைக் குடியரசு தின அணிவகுப்பிற்காக தேர்வு செய்துள்ளது.
குடியரசு தின விழாவில் அணிவகுக்கும் பள்ளி மாணவர்கள் - தலைநகரில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பி
தலைநகரில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பின்போது டெல்லி, ராஜஸ்தானைச் சேர்ந்த 636 பள்ளி மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Over 600 school kids to take part in Delhi's R-Day parade
இம்மாணவர்கள் டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இம்மாணவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இது அமையுமென மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இந்திய ராணுவத்துக்கு புதிய துணைத்தளபதி நியமனம்