தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒன் இந்தியா விரிச்சுவல் இசை நிகழ்ச்சி- 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு! - ஒன் இந்தியா விரிச்சுவல் இசை நிகழ்ச்சி

மும்பை: ஷிபானி காஷ்யப், சுமித் சைனி, விபின் அனேஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாளை (மே 31) ஒன்றிணைந்து மெய்நிகர்(Virtual) மேடையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். பூட்டுதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவித்துள்ளனர்.

One India Virtual Concert
One India Virtual Concert

By

Published : May 30, 2020, 8:44 PM IST

பூட்டுதல் காலத்தில் இசை ஒற்றுமையைக் காண்பிப்பதற்காக ஷிபானி காஷ்யப், சுமித் சைனி, விபின் அனேஜா, மனன் தேசாய் மற்றும் மேகா சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன் இந்தியா மெய்நிகர் (Virtual) கச்சேரியில் ஒன்றுபட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்பதைக் காணலாம். இதன் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் அஸ்ஸாம், பீகார், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து நாளை (மே 31) இந்த இசை நிகழ்ச்சியைக் காணலாம்.

பூட்டுதலின் போது பாதிக்கப்படுபவர்களுக்கு நிதி திரட்டுவதே இந்த கச்சேரியின் நோக்கம், மேலும் தொழில்துறையுடன் தொடர்புடைய திறமையான தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல நிலையான வழியை வழங்க முயற்சிக்கும் என இசைத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: லாக்டவுன் 5.0 விதிமுறைகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details