வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 2019-20ஆம் ஆண்டின் டிசம்பர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 4.73 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலும் நிறுவனங்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமான வரி தொகை எவ்வளவு தெரியுமா? - வருமான வரி தாக்கல்
டெல்லி: நடப்பாண்டில் தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வது குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வருமான வரி
நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது. இது குறித்து வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2019-20ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 4.73 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 5.65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.