கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேற்று (செப்டம்பர் 14) தொடங்கியது. மாநிலங்களவையில் நேற்றை முதல் அமர்வில் சிறுபான்மை விவகார அமைச்சகம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
டெல்லி : ஆறு சிறுபான்மை சமூக மாணவர்களின் கல்வி ஊக்க உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஏறத்தாழ 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அப்பாஸ் நக்வி, "2014-15ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான சிறுபான்மை சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதுமுள்ள 4 கோடியே 6 ஆயிரத்து 80 மாணவர்களுக்கு ரூ. 11 ஆயிரத்து 690 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
2015-2016ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 21 ஆயிரத்து 160 கோடியே 84 லட்சமாகும். அமைச்சகத்தின் பல்வேறு உதவித்தொகை திட்டங்களின் கீழ் 3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 546 பயனாளிகளுக்கு ரூ. 9 ஆயிரத்து 223 கோடியே 68 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 54 விழுக்காடு உதவித்தொகை சிறுபான்மை பெண் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.