டெல்லி:நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் சேர்த்து கரோனா காலகட்டத்திற்கு முன்னதாக சுமார் 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் கடந்த 12 மாதங்களுக்குள் 36 ஆயிரத்து, 433 வென்டிலேட்டர்கள் ''மேக் இன் இந்தியா '' திட்டத்தின் மூலம் அனைத்து பொது சுகாதார மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வென்டிலேட்டர்கள் மீதான அனைத்து ஏற்றுமதி கட்டுப்பாடுகளும் இப்போது அகற்றப்பட்டு, மேக் இன் இந்தியா மூலம் வென்டிலேட்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் இந்தியா மருத்துவ பொருட்கள் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.
தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், இந்தியா கிட்டத்தட்ட பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வென்டிலேட்டர்கள், பிபிஇ கருவிகள் மற்றும் என் -95 முகக்கவசங்களை மட்டுமே நம்பியிருந்தது. ஆனால் தற்போது இந்தியா உள்நாட்டில் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை உறுதிசெய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கும் இலவச முகக்கவசங்கள், மருந்துப் பொருள்கள் விநியோகித்தும் வந்துள்ளது.