தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயணிக்க 103 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ள உ.பி அரசு! - ஷாம்லி தொழிலாளர்கள்

லக்னோ: ஊரடங்கு காரணமாக சிக்கித் தவித்த 3,000-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு, தங்கள் சொந்த பகுதிகளுக்குத் திரும்பிச் செல்ல பேருந்து வசதியை உத்தரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Over 3,000 migrant workers in Uttar Pradesh's Shamli sent home
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து ஏற்பாட்டை செய்துள்ள உ.பி அரசு!

By

Published : May 11, 2020, 5:33 PM IST

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வேலையிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், மேற்கு உத்தரப்பிரதேசத்தை அடுத்துள்ள ஷாம்லி மாவட்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த 3 ஆயிரத்து 442-க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம், அவரவர் சொந்த பகுதிகளுக்குச் செல்ல கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் ஷாம்லி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட 103 பேருந்துகளில் திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து ஏற்பாட்டை செய்துள்ள உ.பி அரசு!

தற்போது, அங்கு 700 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும்; அவர்கள் அனைவரும் விரைவில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :'கரோனாவுக்கு எதிரான போர்; முன்னணியில் நிற்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள்'

ABOUT THE AUTHOR

...view details