தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் குருத்துவாராவில் சிக்கித் தவிக்கும் சீக்கியர்கள் - சீக்கியத் தலைவர் மஞ்சிந்தர் சிங் கோரிக்கை

டெல்லி: குருத்துவாராவில் சிக்கித் தவிக்கும் சீக்கியர்களை மீட்குமாறு சீக்கியத் தலைவர் மஞ்சிந்தர் சிங் டெல்லி. பஞ்சாப் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

over-300-stranded-in-delhi-gurdwara-few-of-them-sick-dsgmc
over-300-stranded-in-delhi-gurdwara-few-of-them-sick-dsgmc

By

Published : Apr 1, 2020, 12:59 PM IST

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியிலுள்ள மஞ்சு கா தில்லா குருத்துவாராவிற்கு, பஞ்சாபிலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்ட 300க்கும் மேற்பட்டோர் தங்களது மாநிலத்திற்கு திரும்ப இயலாமல் சிக்கித் தவித்துவருகின்றனர்.

அவர்களுக்கு குருத்துவாராவில் தேவையான உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டு வந்தாலும், அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவருகின்றனர். இவர்களில் யாரேனும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தற்போதுவரை தெரியவில்லை எனவும் இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அளிப்பது அவசியம் எனவும் டெல்லியின் சீக்கியத் தலைவர் மஞ்சிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை தான் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்-க்கு ட்விட்டர் மூலம் தெரிவித்தும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலவரப்படி டெல்லியில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில் இவர்களை மீட்க டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் ஆவண செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முன்னதாக டெல்லியிலுள்ள நிஜாமுதீனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 24 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details