கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்தை கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசு முடக்கியது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
கடந்த மே 7ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஏழாவது கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஏழாவது கட்ட வந்தே பாரத் திட்டத்தில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.