தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

26 ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் பங்கேற்று நிகழ்த்திய கின்னஸ் சாதனை! அப்படி என்ன செய்தார்கள்? - கின்னஸ் உலக சாதனை

புவனேஸ்வர்: நேற்று தேசிய பல் துலக்குதல் தினத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் பல் துலக்கி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

Guinness World Record

By

Published : Nov 8, 2019, 9:08 AM IST

Updated : Nov 8, 2019, 9:50 AM IST

'தேசிய பல் துலக்குதல்' தினத்தை முன்னிட்டு, நேற்று (நவ., 7) உலகின் மிகப்பெரிய இலவச பழங்குடி மக்களின் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மொத்தம் 26 ஆயிரத்து 882 மாணவர்கள் ஒரே நேரத்தில் பல் துலக்கி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் சுமார் 30 ஆயிரம் பூர்வக்குடி ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டுவருகிறது.

வாய் சம்பந்தமான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வைக் கலிங்கா கல்வி நிறுவனம், இந்திய பொதுச் சுகாதார பல் மருத்துவ சங்கம் (IAPHD), கோல்கேட் பால்மோலிவ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியுள்ளன. இக்கல்வி நிறுவனம் படைக்கும் நான்காவது கின்னஸ் சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

கலிங்கா பள்ளி மாணவர்கள் பங்கேற்று நிகழ்த்திய கின்னஸ் சாதனை

கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனம்

Last Updated : Nov 8, 2019, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details