போதைப் பொருள்கள் அதிகமாகக் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு எதிராக அவர்கள் அமலாக்கத் துறையினருடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்தனர்.
போதைப் பொருள்களுக்கு எதிராக நாடு முழுவதும் வேட்டை! - போதை பொருள் பறிமுதல்
டெல்லி: நாடு முழுவதும் இரண்டாயிரம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் முடிவாக, நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக இரண்டாயிரம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆறு வெளிநாட்டவர் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போதைத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் அனைவரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 879.80 கிலோ கஞ்சா, 13 கிலோ மார்பைன், ஆயிரத்து 155 கிலோ கேட்டமைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போதைத் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.