தெலங்கானா மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. அதே உற்சாகத்தில் தற்போது மக்களவை தேர்தலை அக்கட்சி தனியாக சந்திக்கிறது. நிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வர் மகள் போட்டியிடும் தொகுதியில் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்!
ஹைதராபாத்: தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் போட்டியிடும் நிஸாமாபாத் தொகுதியில் சுமார் 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விவசாயிகள் வேட்புமனு
இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், சுமார் 200 விவசாயிகள் அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மாலை வரை நீண்ட வரிசையில் நின்று வேட்புமனுவை அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளனர்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக கூறி, அந்தத் தொகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விவசாயிகளை பாஜக தூண்டிவிட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.