தமிழ்நாடு

tamil nadu

அசாமில் 2.83 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு

By

Published : Oct 1, 2020, 1:04 PM IST

அசாமில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 2.83 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Assam floods
Assam floods

அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரத்தின் காரணமாக நான்கு மாதமாக வெள்ள பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பிரம்மபுத்ர நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் எட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் மொத்தம் 2.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகோவான், பிஸ்வாந்த், ஹோஜாய், மோரிகான், திப்ரூகா, கோல்பாரா, கோல்காட், மேற்கு கார்பி ஆகிய எட்டு மாவட்டங்களில் சுமார் 26 ஆயிரத்து 652 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பருவமழை காலத்தில் மட்டும் வழக்கத்தை விட 11 விழுக்காடு கூடுதல் மழைப் பொழிவை அசாம் கண்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 146 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிகார் தேர்தல்: போலீஸ் ரெய்டில் சிக்கிய 74 லட்சம் ரூபாய்!

ABOUT THE AUTHOR

...view details