இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் கரோனா தடுப்பு பணிகள், இந்தியாவின் தற்போதைய நோய் பாதிப்பு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்குப்பின் சுகதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 3.1 விழுக்காடாக உள்ள நிலையில், நோய் தொற்றில் குணமடைபவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு இருமடங்காகும் எண்ணிக்கை சராசரியாக 9.1 நாள்களாக உள்ளது.