சர்வதேச அளவில் நான்காவது மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஓடும் அனைத்து ரயில்களையும் மின்சாரத்தில் இயக்க ஏதுவாக ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டரில்,"பிரமதர் மோடி ஆட்சியின் கீழ் உள்கட்டமைப்பில் இந்தியன் ரயில்வே பல மைல்கற்களை எட்டியுள்ளது. 2014-20 காலகட்டத்தில் மட்டும் சுமார் 18,065 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கட்டது. இது 2008-14 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 371 விழுக்காடு அதிகமாகும்" என்று பதிவிட்டுள்ளார்,
அத்துடன் கிராபிக் புகைப்படம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். அதில் 2008-2014 காலகட்டத்தில் 3,835 கி.மீ ரயில் பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.