மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நாட்டின் முதல் மின்னனு நிர்வாக மையத்தை காணொலி மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று (ஜூலை25) தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட பொது முடக்கமானது மார்ச் மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஜூலை 24ஆம் தேதிவரை அமலில் இருந்தது. இந்தச் சமயத்தில் நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 327 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு லட்சத்து 90 ஆயிரத்து 112 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
ஊரடங்கு எதிரொலி: பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் மெட்ரோ!
பொது முடக்க காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 431 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கரோனா நோய்க் கிருமி பரவும் சூழலிலும் கூட, மகாராஷ்டிரா நீதிமன்றங்கள் செயல்பட்டு, 61 ஆயிரத்து 986 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் நீதி பெறுவதை, இந்தக் காணொலி மூலம் நடத்தப்பட்ட விசாரணை தடுத்துள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை வழக்கமான நீதிமன்றங்களே காலப்போக்கில் காணொலி மூலம் நடத்தப்படும், நீதிமன்றம் நிரப்பிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இருப்பினும் ஒருபோதும் நிஜமான நீதிமன்றத்தின் இடத்தை காணொலி நீதிமன்ற விசாரணையால் நிரப்ப முடியாது.
கரோனா செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?
உண்மையில் இதுபோன்ற மிகவும் அசாதாரண சூழலில்தான் மட்டும் காணொலி மூலம் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் சந்திக்கும் நீதிமன்றம் செயல்படும். விரைவில் வழக்குரைஞர்கள், நீதிபதிகள் சந்திக்கும் இயல்பு நீதிமன்ற சூழலுக்கு படிப்படியாகத் திரும்பிவிடுவோம். நீதிமன்ற இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு முன், முறைப்படி மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.