தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திடீரென்று வந்த 154 மிசோரம் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்திய அரசு - மிசோரம் அரசு

ஐஸ்வால்: அரசிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் வந்த 154 மிசோரம் தொழிலாளர்களை வெவ்வேறு மாவட்டங்களில் மாநில அரசு தனிமைப்படுத்தியுள்ளது.

ে்ே்
்ே்ே

By

Published : May 7, 2020, 3:16 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, இ பாஸ் பெற்றுக்கொண்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு சிட்டாக பறந்தனர்.

அந்த வகையில், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்த மாநிலமான மிசோரமிற்கு வருகை தந்தனர். ஆனால், அவர்கள் வருகையை குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி, அம்மாநில அரசு அனைவரையும் அவரவர் சொந்த மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறுகையில், "நான்கு வடகிழக்கு மாநிலங்களிலிருந்து திரும்பிய 154 பேர் வெவ்வேறு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று கூற முடியாது. இவர்கள் திரும்பி வருவதற்கு முன்பு டி.ஆர்.சி. (DRC), ஒய்.எம்.ஏ. (YMA) அமைப்புகளுக்கு புகாரளிக்காததால் அவர்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டனர்" என்றார்.

மிசோரம் அரசு நான்கு மாநிலங்களில் சிக்கித் தவித்த கிட்டத்தட்ட 700 பேரை ஏப்ரல் 30 முதல் மே 2ஆம் தேதிகளில் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சியை மேற்கொண்டது. முறையான தகவல் தெரிவிக்காமல், மக்கள் சொந்தமாக திரும்பி வர வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் ஒரே நாளில் 428 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details