அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று காலை 8 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கிய 10 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது.
ஃபோனி புயல்: முன்கூட்டியே ரூ.1000 கோடி அளிக்கப்பட்டுள்ளது - மோடி! - modi
ஜெய்ப்பூர்: ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முன்கூட்டியே ரூ.1000 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஃபோனி புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் இந்துவான் நகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முன்கூட்டியே ரூ.1000 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உறுதுணையாக நாட்டு மக்களும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து நிற்பதாகவும் அவர் கூறினார்.