தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புற்றுநோய் மருத்துவமனையில் 100 பேருக்குக் கரோனா! - ஒடிசா மாநில செய்திகள்

ஒடிசா மாநிலத்திலுள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Corona
Corona

By

Published : Jul 6, 2020, 4:28 PM IST

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் ஆச்சார்யா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு ஏராளமான புற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே அங்கு சிலருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனே மருத்துவமனை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அப்பரிசோதனை முடிவில் நூறுக்கும் மேற்பட்டோருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

பின்னர் கரோனா பாதித்த நோயாளிகள் புவனேஸ்வரிலுள்ள கரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details