தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் முழு அடைப்பு: 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல் நிலைய சரித்திரப் பதிவேடு!

பெங்களூரு: மராட்டிய மேம்பாட்டு வாரியத்திற்கு எதிரான கன்னட அமைப்புகளின் முழு அடைப்பு நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல் நிலைய சரித்திர பதிவேடு பதியப்பட்டுள்ளது.

karnataka-bandh
karnataka-bandh

By

Published : Dec 5, 2020, 12:22 PM IST

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். அதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி முழு அடைப்பு நடத்தப்படும் என அறிவித்தன.

அதன்படி இன்று (டிச. 05) மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில், முழு அடைப்பு தொடர்பாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது காவல் நிலைய சரித்திர பதிவேடு பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த முழு அடைப்பு பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனைத் தவிர்க்குமாறு எடியூரப்பா வேண்டுகோள்விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் முழு அடைப்பு: தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details