தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதாரம் பற்றி மத்திய பாஜக அரசுக்கு ஒன்றும் தெரியாது - சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: பொருளாதாரம் குறித்த புரிதல் அரசுக்கு இல்லை என விமர்சித்த சிதம்பரம், தவறுகளை நியாயப்படுத்திக்கொள்வதில் பாஜக பிடிவாதமாக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

P.C
P.C

By

Published : Dec 5, 2019, 5:33 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கிய மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. முன்னதாக, சிபிஐ தொடுத்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் அவருக்குத் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டதால், சிறைவாசம் அனுபவித்தார். இதனிடையே, டிசம்பர் 3ஆம் தேதி பிணை வழங்கப்பட்ட நிலையில், நேற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது அவர், "காங்கிரஸ், சில கட்சிகளுக்கு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வலிமை உள்ளது. ஆனால், அதற்கு நாம் பொறுத்திருக்க வேண்டும். ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் வளரச்சி ஐந்து விழுக்காட்டை தொட்டால், அது நம் நல்வாய்ப்பாகும். இந்த அரசுசந்தேகத்திற்குரிய முறையில் வளர்ச்சியை கணக்கெடுப்பதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியிருந்தார். வளர்ச்சி ஐந்து விழுக்காட்டுக்கு கீழ் இருக்காது, 1.5 விழுக்காட்டிற்கு கீழ் இருக்க கூட வாய்ப்புள்ளது.

சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

பொருளாதாரம் குறித்து பிரதமர் அமைதி காக்கிறார். அமைச்சர்களை விட்டு சத்தம் போடவைக்கிறார். பொருளாதாரத்தை திறமையற்ற வகையில் பாஜக கையாள்கிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதை பாஜக வளர்ச்சி என நினைக்கிறது. பொருளாதாரம் குறித்த புரிதல் அரசுக்கு இல்லை. தவறுகளை நியாயப்படுத்திக்கொள்வதில் பாஜக பிடிவாதமாக உள்ளது" என்றார்.

சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: சிதம்பரம் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details