தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்கள் கைது! - புதுச்சேரி காமராஜர் சிலை

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைதுசெய்யப்பட்டனர்.

தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்
தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்

By

Published : May 29, 2020, 3:37 PM IST

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கையை மத்திய அரசு முடக்கியதாகக் குற்றஞ்சாட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பிரதமர் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலை சந்திப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், நிர்வாகி இளங்கோ தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களைக் காவல் துறையினர் தடுத்துநிறுத்தி வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்கள் கைது!

அப்போது போராட்டக்காரர்களில் சிலர் பிரதமரின் உருவ பொம்மையை எரிப்பதற்கு முயன்றதை அறிந்த காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு வைக்கோலால் தயாரிக்கப்பட்ட உருவ பொம்மையை போராட்டக்காரர்களிடமிருந்து பறித்தனர்.

இதனால் பிரதமர் உருவ பொம்மை எரிப்பது தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details