தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்.பி.க்கள் ஊதியத்தை குறைக்க அவசர சட்டம் - திருமாவளவன் எதிர்ப்பு - திருமாவளவன் பிரதமருக்கு கடிதம்

டெல்லி: எம்.பி.க்களின் ஊதியத்தை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை உறுப்பினர் திருமாவளவன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

thiruma
thiruma

By

Published : Apr 8, 2020, 1:46 PM IST

கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், இதற்கு அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. எனவே, எம்.பி.க்களின் ஊதியத்தை 30 விழுக்காடு குறைக்கவும் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவள்ளது.

இதனை ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என குறிப்பிட்ட மக்களவை உறுப்பினர் திருமாவளவன், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "எம்.பி.க்களின் ஊதிய குறைப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், விவாதமின்றி அவசர சட்டம் மூலம் இதனை அமல்படுத்துவதற்கான அவசரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான எம்.பி.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

இதனை தவிர்த்து எனது ஒரு மாத ஊதியத்தை புதுச்சேரி அரசுக்கு வழங்கியுள்ளேன். வரும் காலங்களிலும் எங்களின் ஊதியத்தை மத்திய அரசுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், ஊதிய குறைப்பு நடவடிக்கையில் எங்களின் சம்மதத்தை பெறாதது ஜனநாயக விரோதமானது. எனவே, அவசர சட்டத்தை திரும்ப பெற்று எம்.பி.க்கள் தானாக தங்கள் ஊதியத்தை வழங்க கோரிக்கை விடுக்க வேண்டும்.

தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தான் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகள் இது ரத்து செய்யப்படுவதை ஏற்று கொள்ள முடியாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details