தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! - கடுமையான பனிப்பொழிவு

ஜம்மு-காஷ்மீரில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலை, லடாக் பகுதிகளில் அடுத்த 24-36 மணி நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

snow
snow

By

Published : Dec 8, 2020, 7:55 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் மலை, லடாக் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு பெய்யக்கூடும் என்பதால், அங்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை முன்னறிவிப்பால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இந்த எச்சரிக்கையின்போது கடுமையான மழைப்பொழிபு அல்லது பனிப்பொழிவு உண்டாகும்.

வானம் பனிமூட்டத்துடன் காணப்படும். ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளிலும், சோஜிலா பகுதிகளிலும் அதிக பனிப்பொழிவு இருக்கும். அடுத்த 24-36 மணி நேரத்தில் இப்பகுதிளில் கடுமையான பனிப்பொழிவு உண்டாகும். இந்தக் காலங்களில் சிந்து சமவெளிகளில் பரவலாக மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும்.

பனிப்பொழிவால் சோஜிலா, முகலாய சாலை, பன்னஹிலால்-ரம்பன் போன்ற முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும். இந்த அறிவிப்பை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details