கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கனமுழை பெய்துவருகிறது. தானே, பால்கர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிற்கு கடும் மழை எச்சரிக்கை!
மும்பை: மகாராஷ்டிராவின் தானே, பால்கர் ஆகிய பகுதிகளில் மிக கடுமையான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Maharashtra Rain
அவசர உதவிக்கு 1916 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வட கர்நாடகத்திலும் கனமழை பெய்துவருகிறது. ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்காத நிலையில், இந்த மழை மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.