தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஓபிஎஸ் சந்திப்பு - central finance minister

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

OPS meets Nirmala sitharaman in delhi

By

Published : Jul 23, 2019, 2:27 PM IST

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் உள் துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியுள்ளார். நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்கக் கோரும் கோரிக்கை மனுவை நிர்மலா சீதாராமனிடம் ஓ. பன்னீர்செல்வம் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details