கடந்த ஒரே ஆண்டில் பாஜகவைச் சேர்ந்த ஐந்து முக்கிய தலைவர்கள் காலமானார்கள். முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் 18 நாட்கள் வித்தியாசத்தில் இயற்கை எய்தினார்கள். இவர்களின் இறப்பு பாஜகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச பாஜக சார்பில் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் சூனியம்? எம்.பி சர்ச்சை பேச்சு! - பிரக்யா சிங் தாகூர்
டெல்லி: எதிர்க்கட்சியினர் சூனியம் வைத்ததால்தான் அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இறந்ததாக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
![பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் சூனியம்? எம்.பி சர்ச்சை பேச்சு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4246659-273-4246659-1566818846576.jpg)
BJP MP
இதில் பங்கேற்று பேசிய போபால் மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், "தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டபோது என்னிடம் ஒரு சாமியார் பாஜகவுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. எதிர்க்கட்சியினர் எங்களுக்கு சூனியம் வைத்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர், நான் அவர் சொல்லியதை மறந்துவிட்டேன். ஆனால், இப்போது பாஜக மூத்தத் தலைவர்கள் இறந்ததுள்ளதை பார்த்தால், அந்த சாமியார் சொன்னது நினைவுக்குவருகிறது" என்றார். பிரக்யா சிங் தாகூரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.