வேளாண் மசோதா விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
முன்னதாக, மசோதா தாக்கலின் போது மாநிலங்களவைத் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் அத்துமீறி அவமதிப்பான முறையில் நடந்துகொண்டதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களின் இடை நீக்க முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை புறக்கணிப்பு முடிவை மேற்கொண்டுள்ளன.