தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன: பாஜக குற்றச்சாட்டு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மாணவர்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் குற்றஞ்சாட்டினார்.

Opposition misusing students for political gains: BJP
Opposition misusing students for political gains: BJP

By

Published : Jan 10, 2020, 1:02 PM IST

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால், ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “மாணவர்கள் தங்களது படிப்பில் முழு கவனம் செலுத்தி, எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்ட பிரச்னைகள் தொடர்பாக பேசலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். பிறகு ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்?
மாணவர்களை எதிர்க்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை பாஜக அறியும்” என்றார்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் பேட்டி

பின்னர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் இதுவரை ஒருவர் கூட கைது ஏன் செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அகர்வால், “இது தொடர்பாக மாநகர காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறை போராட்டங்களினால் யார் லாபம் அடைகிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details